New year offer 2017

கனடா செய்திகள்

1600 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

12/03/2017

இந்தியாவில் விபத்து, தற்கொலை மற்றும் தீவிரவாதிகள் தாக்குதல்களால் வருடத்துக்கு 1600 இராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் மற்றும் வீரர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 49 ஆயிரம் ஆகும்.

சீனா படையெடுப்பு பாகிஸ்தானுடனான யுத்த்திற்கு பின்னர் இறுதியாக 1999ம் ஆண்டில் கார்கில் போர் நடைபெற்றது.

அதன்பின்னர் போர் எதுவும் நடைபெறாத நிலையிலும் வருடத்துக்கு 1600 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீதிவிபத்துக்கள்இ வானூர்தி, கப்பல் விபத்துக்கள் மூலமும் தற்கொலை மற்றும் ராணுவ வீரர்களுக்குள் ஏற்படும் மோதல் போன்றவற்றினால் அவர்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.