New year offer 2017

கனடா செய்திகள்

கனடா வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்களை அதிகரிக்கும் விமான நிறுவனங்கள்

12/04/2017

ஒவ்வொரு பயணிகளினதும் இருக்கை பதிவுகள் மற்றும் பயணக் கட்டணங்களில் மேலதிக கட்டணங்களை வசூலிப்பதன் மூலம் உலகளாவிய விமான நிறுவனங்கள் இந்த வருடம் 82 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சம்பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டை விட 1.18 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெற்றுக் கொண்டுள்ள எயார் கனடா நிறுவனம் அதிக வருமானம் பெறும் உலகின் முதல் பத்து இடங்களில் உள்ள விமான நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

விமான வருமானங்களை கண்காணிக்கும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான IdeaWorks நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையின் பிரகாரம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆய்வு நிறுவனம் 138 விமான நிறுவனங்களை மறுபரிசீலனை செய்து அவற்றில் 66 விமான நிறுவனங்களில் ஆய்வு செய்து மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. எனினும் எயார் கனடா நிறுவனம் முதல்முறையாக ஆய்வுக்குள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுப் பட்டியலில் 6.2 பில்லியன் டொலர் வருமானத்துடன் அமெரிக்க விமான நிறுவனமே முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.