New year offer 2017

கனடா செய்திகள்

சமூக வீட்டு வசதி தொடர்மாடி கட்டிட தீயில் ஒருவர் மரணம் மூவர் படுகாயம்

12/06/2017

கனடா- ரொறொன்ரோ சமூக வீட்டு வசதி தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லோறன்ஸ் அவெனியு மேற்கில் விளெமிங்டன் வீதி அலன் வீதிக்கு அருகாமையில் திங்கள்கிழமை இரவு 9.30மணியளவில் சம்பவம் நடந்துள்ளது. கட்டிடத்தின் அலகு ஒன்றின் உள்ளே தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொறொன்ரோ தீயணைப்பு பிரிவினரின் தேடுதல் முயற்சியில் தொகுதி ஒன்றிற்குள் இருந்து மூன்று குடியிருப்பாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர் என ரொறொன்ரோ தீயணைப்பு தலைமை அதிகாரி மத்தியு பெக் தெரிவித்துள்ளார்.

40-வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் இரு ஆண்கள் உயிராபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒருவர் பின்னர் வைத்தியசாலையில் இறந்துவிட்டார்.

கிட்டத்தட்ட 10 தீயணைப்பு டிரக்குகள் மற்றம் 40-தீயணைப்பு பணியாளர்கள் சம்பவ இடத்தில் காணப்பட்டனர்.