New year offer 2017

கனடா செய்திகள்

கனடிய அனைத்து உள்ளங்களையும் தொட்ட பெண்ணின் கதை

01/11/2018

நியு பவுன்லாந்தை சேர்ந்த கொன்வீனியன் கடை நடாத்திவந்த பெண்ணின் கதை கனடிய உள்ளங்கள் அனைத்தையும் தொட்டுள்ளது. இவர் நிலை 4 மார்பக புற்று நோயால் பாதிக்ப்பட்டிருந்த நிலையில் லாட்டரியில 1.5 மில்லியன் டொலர்களை வென்றார். ஆனால் இவரால் தொடர்ந்து வாழ முடியவில்லை. இவரது நோய் காரணமாக இறந்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

டயான் பிசப் என்னும் இப்பெண் நவம்பரில் Super Set For Life லாட்டரியில் 1.5மில்லியன் டொலர்களை வென்றார். பரிசை பெற முன்னர் அணி உரிமையாளர்களால் இயங்கும் Needs Convenience கடை ஒன்றை நடாத்தி வந்தார். 20களில் உள்ள இரு மகன்களிற்கு தாயான இவர் தனிப்பெற்றோர் ஆவார்.

மார்பகபுற்று நோயால் பாதிக்கப்பட்டு வேலையை விட வேண்டிய நிலைக்கு ஆளானார். இடுப்பு எலும்பு மற்றும் நுரையீரல்களிலும் நோய் பரவ தொடங்கியது. நோயுடன் போராடி ஹிமோதெரபி காரணமாக கடுமையான சோர்வு நிலைமை ஏற்பட்டது.

இவருக்கு கிடைத்த வெற்றி பணம் புதிய வீடு அல்லது பயணங்களிற்கு அல்ல உயிர் பிழைக்க என இவர் தெரிவித்தார். தானும் தனது பிள்ளைகளும் உயிர் வாழலாம் என நினைத்திருந்தார்.

2016ல் இவருக்கு நிலை 3-எதிர் மறை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.