New year offer 2017

கனடா செய்திகள்

லண்டன் மேயர் எச்சரிக்கை

01/12/2018

பிரித்தானியா உடன்பாடின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமாயின் பாரிய வேலையின்மை பிரச்சினையை எதிர்கொள்ளும் என லண்டன் மேயர் சாதிக் கான் எச்சரித்துள்ளார்.

பொருளாதார ஆய்வாளர்களின் ஆராய்ச்சியின் மூலமான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சாதிக் கான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உடன்பாடு எட்டப்படாது, ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியம் மற்றும் ஒற்றை சந்தை ஆகியவற்றைவிட்டு பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில் 2030ஆம் ஆண்டளவில் 5 லட்சம் பேர்வரை வேலையின்மையை எதிர்கொள்வதுடன், முதலீட்டில் 50 பில்லியன் பவுண்ட் இழப்பை எதிர்நோக்க நேரிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பிரஸ்சல்ஸ் பேச்சுவார்த்தையின் போது மாற்று மூலோபாயங்களை அரசாங்கம் கையாள வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

பொருளாதார ஆய்வாளர்களின் ஆய்வானது, அரசாங்கம் ஏன் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்? மற்றும் ஒற்றை சந்தையிலும், சுங்க ஒன்றியத்திலும் நீடிக்கும் வகையிலான பேச்சுவார்த்தைகளை ஏன் முன்னெடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.