New year offer 2017

கனடா செய்திகள்

மாஸ்கோ விமான விபத்து

02/11/2018

ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே பயணிகள் விமானம் நொறுங்கியது. இதில் பயணித்த 71 பேரும் பலியாகியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மாஸ்கோ அருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏ. என்-148 என்ற சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 71 பேருடன் நடுவானில் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் விமானத்தில் பயணித்தவர்களின் கதி என்னவானது எனத் தெரியவில்லை. அனைவரும் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விமான பாகங்கள் விழுந்த இடம் குறித்தும், உயிருடன் யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றது.

இதில் பயணம் செய்த 71 பேரில் 65 பேர் பயணிகள் மற்ற 6 பேர் விமான ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.