New year offer 2017

கனடா செய்திகள்

ட்ரம்ப்பை எச்சரித்த ஹிலாரி கிளிங்டன்

03/13/2018

வட­கொ­ரி­யா­வு­டன் இணக்­க­மா­கச் செல்­வ­தற்­காக அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் எடுத்­து­வ­ரும் முயற்­சி­கள் ஆபத்­தில் முடி­யும் என்று தெரி­வித்­தார் அமெ­ரிக்க அதி­பர் தேர்­த­லில் ட்ரம்ப்பை எதிர்த்­துப் போட்­டி­யிட்­ட­வ­ரான ஹிலாரி கிளிங்­டன்.

வட­கொ­ரி­யா­வுக்­கும் தென்­கொ­ரி­யா­வுக்­கும் இடையே இணக்­கம் ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து வட­கொ­ரி­யா­வுக்­கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் இடையே இணக்­கத்­தைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான பேச்­சுக்­கள் தற்­போது மும்­மு­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றன.

அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப், வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன் இரு­வ­ரும் எதிர்­வ­ரும் மே மாதம் நேரில் சந்­திக்­க­வும் ஏற்­பா­டு­கள் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இதற்கு கடும் எதிர்ப்­புத் தெரி­வித்­தார் ஹிலாரி கிளிங்­டன். நெதர்­லாந்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற செய்தியாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘அமெ­ரிக்க அய­லு­ற­வுத்­து­றை­யில் பணி­யாற்­றிய மூத்த அதி­கா­ரி­கள் ட்ரம்ப் நிர்­வா­கத்­தால் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் இல்­லா­மல், அவர்­க­ளின் ஆலோ­ச­னை­க­ளைப் புறக்­க­ணித்தே ட்ரம்ப் தற்­போது செயற்­பட்டு வரு­கி­றார்.

இது பேரா­பத்­தில் முடி­யும். அணு­வா­யு­தங்­களை வைத்து மிரட்­டி­வ­ரும் வட­கொ­ரி­யா­வு­டன் அவ­ச­ரப்­பட்டு எந்த முடி­வுக்­கும் வந்­து­வி­டக்­கூ­டாது’’ என ஹிலாரி மேலும் தெரி­வித்­தார்.