New year offer 2017

கனடா செய்திகள்

மிக மோசமான விமான விபத்து 200 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

04/12/2018

அல்ஜீரியாவில் இராணுவ விமானமொன்று விழுந்து விபத்திற்குள்ளானதில் சுமார் 200 பேர்வரை உயிரிழந்திருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

விபத்தில் நூறு பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை, மொத்த உயிரிழப்பு 200-ஐ எட்டும் என அஞ்சப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அல்ஜீரிய தலைநகருக்கு வெளியே போர்ஃபாரிக் விமானதளத்திற்கு அருகே இன்று (புதன்கிழமை) குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

மேற்கு அல்ஜீரிய நகரான பெச்சார் நகரை நோக்கி இராணுவ துருப்புக்களை ஏற்றிச்சென்ற விமானமொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இராணுவ தளபதி உத்தரவிட்டுள்ள அதேவேளை, அவர் விபத்து பகுதியை நேரில் பார்வையிடவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு இடம்பெற்ற எயர் அல்ஜீரியா ஜெட் விமான விபத்தில் 102 பேரின் உயிர் காவுகொள்ளப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இடம்பெற்ற மிக மோசமான விபத்தாக இவ்விபத்து நோக்கப்படுகிறது.