New year offer 2017

கனடா செய்திகள்

லண்டன் இளவரசர் ஹரி திருமண விருந்தினர் பட்டியலில் அரசியல் வாதிகளின் பெயர் இல்லை

04/12/2018

லண்டன்- அரசியல் வாதிகள் உலக தலைவர்களிற்கு மாறாக நண்பர்கள் மற்றும் விருந்தினர்கள் மட்டுமே அடுத்த மாதம் இடம்பெறும் இளவரசர் ஹரி மற்றும் மெஹன் மார்க்லே திருமணத்தில் பங்கு கொள்வர் என அறியப்படுகின்றது.

 

திருமணத்திற்கு யு.கே.மற்றும் சர்வதேச அரசியல் தலைவர்களின் அதிகார பட்டியல் தேவையில்லை என தீர்மானிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது மே-19 Windsor Castle's St. George's Chapel-லில் இடம்பெறும் சடங்கில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட 600பேர்களிற்கிடையில் யு.எஸ்.அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டிஷ் பிரதம மந்திரி திரேசா மே, ஆகியவர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி Sophie Gregorie Trudeau வுசரனநயர திருமண வைபவத்தில் கலந்து கொள்ளப்போதில்லை என பிரதமரின் பேச்சாளர் ஒருவர் சிரிவி செய்தியில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் யு.எஸ். அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிசேல் இருவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் கூறப்படுகின்றது.