New year offer 2017

கனடா செய்திகள்

தண்டனையை எதிர் நோக்கும் முன்னாள் உயர் அரசியல் உதவியாளர்

04/12/2018

ரொறொன்ரோ--ஓரு காலத்தில் உயர் அரசியல் உதவியாளராக விளங்கியவர் எரிவாயு ஆலை மோசடி தொடர்பான கணனி தகவல்களை அழித்த குற்றத்திற்கான தண்டனையை இன்று தெரிந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது.

 

முன்னாள் லிபரல் முதல்வர் டால்ரன் மக்குயின்ரியின் தலைமை பணியாளர் டேவிட் லிவிங்ஸ்ரன் சட்ட விரோதமாக கணனி பாவித்த குற்றத்தை ஜனவரி மாதம் ஒப்புகொண்டார்.

2011 ஒன்ராறியோ தேர்தலிற்கு முன்னராக இரண்டு எரிவாயு ஆலைகளை ரத்து செய்வது குறித்த அரசாங்கத்தின் முடிவு சம்பந்தமான அறிக்கைகளை அழிக்கும் சதியில் பங்கு வகித்தார் என நீதிமன்றம் கண்டுள்ளது.

65-வயதுடைய டேவிட் லிவிங்ஸ்ரனிற்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வாதிட்டனர்.

நிபந்தனை வெளியேற்றம் என எதிர்தரப்பு வலியுறுத்தினர்.

மக்குயின்ரியின் வாரிசான கத்லின் வின் குறித்து மாகாண வாக்காளர்கள் தங்கள் தீர்ப்பை வழங்குவதற்கு மாதங்கள் இருக்கையில் இன்று தண்டனை வழங்குதல் இடம்பெற உள்ளது.