New year offer 2017

கனடா செய்திகள்

கொரிய தீபகற்பத்தில் பதற்றநிலை

04/14/2018

வட கொரியா நாட்டைக் கண்காணிப்பதற்காக பிரித்தானியா தனது மூன்றாவது போர்க்கப்பலையும் அனுப்பியுள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபை வட கொரியாமீது விதித்துள்ள தடைகளை அமல்படுத்துவதற்கு உதவும் வகையிலும், இதர கூட்டு நாடுகளுடன் இணைந்து போர் ஒத்திகைகளை மேற்கொள்வதற்காகவும் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள HMS Sutherland உடன் HMS Albion என்னும் போர்க்கப்பலையும் பிரித்தானியா அனுப்பியுள்ளது.

HMS Argyll என்னும் போர்க்கப்பலும் இந்த ஆண்டில் அவுஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட இருப்பதாக பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பாதுகாப்புத்துறை செயலர் Gavin Williamson இந்த நடவடிக்கை அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளும் ,வட கொரியாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரித்தானியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து வட கொரியாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.