New year offer 2017

கனடா செய்திகள்

முன்னாள் பிரதமரொருவருக்கு நாட்டில் இருந்து வௌியேற தடை

05/12/2018

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் அவரின் மனைவி ரொஸ்மா மன்சூர்க்கு நாட்டில் இருந்து வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமருக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் , அவரின் ஆட்சிக்காலத்தில் அது தொடர்பான விசாரணைகள் இடம்பெறவில்லை என அந்நாட்டு குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை , தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நாட்டில் இருந்து வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மலேசிய பிரதமர் தமது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் பதிவுகளை மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தனது குடும்பத்துடன் ஒருவாரக்காலம் வௌிநாடு செல்லவுள்ளதாக இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.