New year offer 2017

கனடா செய்திகள்

நடுவானில் நேருக்கு நேராக வந்த விமானங்கள் நூலிழையில் பெரும் விபத்து தவிர்ப்பு

05/13/2018

நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவிலிருந்து திரிபுரா தலைநகர் அகர்தாலாவுக்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது.

அப்போது அகர்தாலாவிலிருந்து கொல்கத்தாவுக்கு ஏர் டெக்கான் விமானம் வந்து கொண்டிருந்தது.

வங்கதேச தலைநகர் டாக்கா வான்பகுதியில் சென்ற போது இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் வந்தன.

இரு விமானங்களும் மிகவும் நெருங்கி வந்த நிலையில் இரண்டு விமானங்களிலும் அபாய ஒலி எழுப்பப்பட்டது.

இதையடுத்து இரண்டு விமானிகளும் பரபரப்பானார்கள், பின்னர் விமான நிலைய கண்ட்ரோல் அறையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இரு விமானங்களின் பறக்கும் உயரம் உடனடியாக மாற்றி அமைக்கபட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இச்சம்பம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.