New year offer 2017

கனடா செய்திகள்

ஐந்து வழிகளில் சரித்திரம் படைத்த ஒன்ராறியோ தேர்தல்

06/09/2018

ஒன்ராறியோ புரோகிறசிவ் கன்சவேட்டிவ் தலைவர் இராஜிநாமா செய்த ஒரு மாதத்தின் பின்னர் இடம்பெற்ற தேர்தலில் கனடாவின மிக தகாவழிப் பேர்போன மேயரின் சகோதரர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 15வருடங்கள் லிபரல் ஆட்சி மாறியுள்ளது.

இத்தேர்தல் ஒரு சாதாரணமானதல்ல என விளைவுகள் நிரூபித்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

டக் வோர்ட்டின் புரோகிறசிவ் கொன்சவேட்டிவ் தீர்க்கமான பெரும்பான்மையாக 76 ஆசனங்களை ஒன்ராறியோ சட்ட மன்றத்தில் வென்றுள்ளது. என்டிபி 40 இடங்களை பெற்றுள்ளது. 15வருட ஆட்சியின் பின்னர் லிபரல் ஆக ஏழு இடங்களை பெற்று தோல்வியடைந்துள்ளது.

தேர்தலில் சரித்திரம் படைத்துள்ள ஐந்து வழிகளாவன:

கிரீன் பார்ட்டி முதல் ஆசனத்தை வென்றுள்ளது.

Green Party க்கு இது சரித்திர தேர்தலாகும். கட்சியின் தலைவர் மைக் ஷெரெனியர் குவெல்வ் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் பிறந்தவரான இவர் 45சதவிகித வாக்குகளை பெற்று கட்சியின் முதலாவது MPP ஆக அமர்கின்றார்.

லிபரல் கட்சி உத்தியோக பூர்வ அந்தஸ்தை இழக்கின்றது.

200-ற்கும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் கத்லின் வின் அவரது நீண்ட கால் ரொறொன்ரோ தொகுதியான டொன்வலி மேற்கில் வெற்றியடைந்த போதிலும் வியாழக்கிழமை 48 இருக்கைகளை லிபரல் இழந்ததால் கட்சியின் தலைமை பதவியை இராஜிநாமா செய்தார்.

லிபரல் கட்சியின் 161-வருட கால வரலாற்றில் உத்தியோக பூர்வ அந்தஸ்தை கட்சி இழந்தமை இதுவே முதல் தடவையாகும்.

உத்தியோக பூர்வ எதிர்க்கட்சியாக என்டிபி வந்துள்ளது.

1987ற்கு பின்னர் மாகாணத்தின் உத்தியோக பூர்வ எதிர்கட்சியாக வந்துள்ளது.

வாக்காளர் வாக்குபதிவு

15-வருட லிபரல் தலைமையை மாற்றும் முயற்சியாக அல்லது இத்தேர்தலில் தங்களின் குரல்களை ஒலிக்க செய்ய ஒன்ராறியோ மக்கள் எடுத்த முயற்சியாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

இது ஒரு வலுவான வாக்காளர் வாக்குபதிவாக அமைந்தது. 1999-ல் PCமுதல்வர் மைக் கரிஸ் 58.3சதவிகித வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.

யூன் 7-ந்திகதிக்கு முன்னராகவே முன் கூட்டிய வாக்கு பதிவு மூலம் 768,895 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அறிமுகம்.

விடயங்களை துரிதப்படுத்தும் பொருட்டு ஒன்ராறியோ தேர்தல் திணைக்களம் மாகாணத்தின் வரலாற்றில் முதல் தடவையாக புதிய மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது.