New year offer 2017

கனடா செய்திகள்

உலகமே எதிர்நோக்கும் ட்ரம்ப் கிம் ஜாங்கின் சந்திப்பில் பாதுகாப்பு பிரச்சனையா

06/11/2018

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சந்திப்பு, அருகில் எந்தப் பாதுகாப்புப் படை வீரர்களும் இன்றி தனியாக நடைபெற உள்ளது.

அணு ஆயுதச் சோதனையைக் கைவிட்ட வடகொரிய அதிபர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைச் சந்திக்க விருப்பம் தெரிவித்ததன் பேரில், நாளை சிங்கப்பூரில் இரு நாட்டுத் தலைவர்களின் ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்தச் சந்திப்பு, உலகளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பல பிரச்னைகள், கருத்துக்கள், பேச்சுவார்த்தைகள், நிராகரிப்புகளைக் கடந்து நாளை இவர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது.

சிங்கப்பூரில் உள்ள செண்டோசோ தீவில் இருக்கும் ஒரு தனியார் சொகுசு விடுதியில் இவர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது. இதனால், ஒரு வாரத்துக்கு முன்பே அவர்கள் சந்திக்க உள்ள ஹோட்டலிலும் இரு தலைவர்கL தங்க உள்ள ஹோட்டலிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைப் பதிவுசெய்ய உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 3,000 பத்திரிகையாளர்களும் ஒளிப்பதிவாளர்களும் சிங்கப்பூர் வருவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சந்திப்புக்கு 20 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.