கனடா செய்திகள்
இலங்கைக்கான கனேடிய தூதுவரைச் சந்தித்த சம்பந்தன்
09/09/2018இலங்கைக்கான கனேடிய தூதுவருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், கனடா உட்பட்ட பல்வேறு நாடுகளில் காணப்படும் அதிகாரப்பகிர்வு முறைமைகளின் அடைப்படையில் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு அமையவேண்டியதன் அவசியத்தினை இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கனேடிய அரசாங்கம் மேற்கொள்ளும் பணிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.