New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் 400 பேர் வேலை இழக்கும் அபாயம்

09/09/2018

ரொறொன்ரோவில் மிகவும் பிரபலமான காலணி உற்பத்தி நிறுவனம், டவுண் சூஸ் (Town Shoes) நிறுவனம் தனது அனைத்து கடைகளையும் மூட தீர்மானித்துள்ளது.

நிறுவனத்தின் வரலாற்று செயல் திறன் போட்டி நிலை மற்றும் எதிர்கால தேவைகள் குறித்து நிறுவனம் மேற்கொண்ட 90 நாட்கள் மதிப்பாய்வை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய, டவுண் சூஸ் (Town Shoes) நிறுவனத்தின் ஜனவரி நிதியாண்டில் அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது.

இதன்காரணமாக தமது 38 கடைகளில் பணிபுரியும் 400 பணியாளர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு!

கனடாவில் கடந்த ஜுலை மாதம் குறைவடைந்திருந்த வேலையின்மை வீதமானது ஓகஸ்ட் மாதம் மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த ஜுலை மாதம் 5.8 வீதமாகவிருந்த வேலையின்மையானது, ஓகஸ்ட் மாதத்தில் 6 வீதமாக உயர்வடைந்துள்ளது.

கனேடிய புள்ளி விபரவியல் தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் இந்த விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வேலையின்மை வீதமானது கடந்த மாதம் இடம்பெற்ற 92 ஆயிரம் பகுதி-நேர இழப்புக்களால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வேலையின்மை விகிதம் உயர்வடைந்துள்ளமையால் 51 ஆயிரத்து 600 நிகர வேலைகளை கனேடிய பொருளாதார இழந்துள்ளது.