New year offer 2017

கனடா செய்திகள்

தசாப்தத்திற்கு ஒருமுறை மலரும் அரிதான பூ ரொறொன்ரோவில் முதல் தடவையாக

09/09/2018

மிகப்பெரியதும் விரும்பத்தகாத மணம் கொண்டதுமான இந்த பூ ரொறொன்ரோ மிருககாட்சிசாலையில் மிக பிரதான ஈர்ப்பு கொண்டதாக அமைய உள்ளது.

அரிதான ஒருவகை இந்தோனேசிய செடியான அமொர்ஃபோபல்லஸ் ரிரனம் எனப்படும் கிளைகள் இல்லாத செடியில் பூக்கும் பூ பிரேதத்தின் மணம் கொண்டது.

ரொறொன்ரோ பெரும்பாகத்தில் முதல் தடவையாக அடுத்த வாரம் பூக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

இந்த வெப்ப மண்டல செடியானது முதல் தடவையாக மலர்வதற்கு ஏழு முதல் 10வருடங்கள் வளரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இப்பூவானது உலகத்தில் மிகப்பெரியதும் விரும்பத்தகாத மோசமான மணம் கொண்டதுமாகும்.

மிகவும் விசேடமான இப்பூவை காண்பதற்கு அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர். இந்த மரம் மரகந்த சேர்க்கைக்கு கெரியன் வண்டுகள் மற்றும் ஈக்களை சார்ந்திருக்கும்.

பூக்கள் சாதாரண பூக்கள் போன்றவை அல்ல. இரத்த சிவப்பு வடிவமைப்பு கொண்டவை. மணம் அழுகிய இறைச்சியினது போன்று இருக்கும்.

48-மணித்தியாலங்கள் பூக்கும் காலத்தை கொண்டிருக்கும் இவை சில நாட்களில் மிக விரைவாக வளர்ந்து விடும்-நாளொன்றிற்கு இரண்டு முதல் மூன்று அங்குலங்கள் வரை-மூன்று அல்லது நான்கு அடிகளை எட்டும்வரை.

பூவை பார்ப்பதற்காக ஏராளமானவர்கள் வருவார்களென எதிர்பார்க்கப் படுகின்றது.

பார்வை நேரம் குறித்த விபரங்கள் அறிவிக்கப்படும் என மிருககாட்சி சாலை தெரிவித்துள்ளது.