New year offer 2017

கனடா செய்திகள்

யு.எஸ்.எல்லை அதிகாரியை அறைந்த கனடிய பெண் கைது

09/10/2018

கனடிய பெண் ஒருவர் யு.எஸ்.எல்லை அதிகாரியை அறைந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். எல்லை பாதுகாப்பு அதிகாரி யு.எஸ்.ற்குள் செல்ல அவருக்கு அனுமதி மறுத்ததால் பெண் அதிகாரியை அறைந்துள்ளார்.

செப்ரம்பர் 2ல் இப்பெண் வாடகை கார் ஒன்றின் மூலம் நயாகரா நீர்வீழ்ச்சி சர்வதேச றெயின்போ பாலத்தில் இறக்கப்பட்டார்.

முன்னர் இவர் எல்லையை கடக்க முயன்ற சமயம் சிக்கல்களிற்கு ஆளானதால் நுழைவு மறுக்கப்பட்டது என யு.எஸ்.நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நுழைவு மறுத்ததும் இவர் வாய் மொழி சண்டை மற்றும் ஒத்துழையாமை போன்ற குற்றங்களை செய்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தும் எதுவித ஆதாரங்களும் முன்னய பயணத்தின் போது இவரிடம் இருக்காததால் நுழைவு மறுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

அதிகாரி கனடாவிற்கு திரும்புமாறு அவருக்கு கட்டளையிட்டதும் நான் உங்கள் முகத்தில் குத்துவேன் என்றால்? என கேட்டதுடன் அதிகாரியின் முகத்தில் அறைந்தும் உள்ளார்.

கிச்சினர் ஒன்ராறியோவை சேர்ந்த 40-வயதுடைய ரியானா நற்றாசா மக்பெர்சன் அதிகாரி ஒருவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனையாக எட்டு வருடங்கள் சிறைத்தண்டனை மற்றும்250,000டொலர்கள் அபராதமும் விதிக்கப்படும்.