New year offer 2017

கனடா செய்திகள்

65-வயது மனிதன் கொலை 16வயது வாலிபன் கைது

09/10/2018

ரொறொன்ரோ மேற்கு மலிவு விலை சந்தை- Flea Market-யில் 65வயதுடைய மனிதனொருவர் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து 16வயது வாலிபன் ஒருவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

பாதிக்கப்பட்டவர் சந்தையின் ஊழியர், றொக்கோ ஸ்கவெட்டா என பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இந்த வருடம் ரொறொன்ரோவில் கொலையால் பாதிக்கப்பட்ட 74வது நபர் இவராவார்.

ஓல்ட் வெஸ்ரேன் வீதி மற்றும் சென்.கிளயர் அவெனியுவிற்கு அருகில் சம்பவம் நடந்துள்ளது.

சுட்டவர் சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டார் ஆனால் சிறிது நேரத்தில் பொலிசார் அவரை கைது செய்து விட்டனர்.

துப்பாக்கிதாரி கட்டிடத்தின் வெளியே சனிக்கிழமை பிற்பகல் 3.30-மணியளவில் துப்பாக்கி ஒன்றுடன் நின்றதை விற்பனையாளர்கள் பலர் கண்டுள்ளனர்.

சந்தைக்குள்ளே ஆயுதமேந்திய திருட்டு சூட்டிற்கு காரணமாகலாம் என கருதப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் விபரங்கள் இளைஞர் குற்றவியல் நீதி சட்டம் பிரகாரம் வெளியிடப்படவில்லை.

சாட்சியங்களின் உதவியை பொலிசார் நாடுகின்றனர்.