New year offer 2017

கனடா செய்திகள்

ரொரன்ரோவின் Riverdale பகுதியில் விபத்து ஒருவர் படுகாயம்

09/11/2018

ரொரன்ரோவின் Riverdale பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Broadview Avenue விற்கு அருகில், Queen street மற்றும் Grant street பகுதியில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை பாதசாரி ஒருவர் மீது பேருந்து ஒன்று மோதுண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரின் தற்போதய உடல் நிலை குறித்த தகவல்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.