New year offer 2017

கனடா செய்திகள்

கனேடிய நாட்டுப்புற இசை விருது வழங்கும் விழா

09/11/2018

கனேடிய நாட்டுப்புற இசை என்ற கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில், எந்தவித புறத்தாக்கங்களும் தனது முன்னேற்றத்தினைத் தடுக்காதென்று பாடகி சானியா டுவைன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கனேடிய நாட்டுப்புற இசைக்கழத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் விழாவில் அதிக விருதுகளைப் பெற்று முன்னிலை வகித்த நட்சத்திரப் பாடகி சானியா டுவைன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் டிம்மின்சில் இடம்பெற்ற சுப்பர் ஸ்டார் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றதோடு Generation Award என்ற விருது மற்றும் அதிக ரசிகர்களைக் கொண்ட பாடகருக்கு கொடுக்கப்படும் என்ற fans’ choice award விருதினையும் பெற்றுள்ளார்.

பிரபல பாடகி சானியா டுவைனின் “Now” என்ற புதிய பாடல் தொகுப்பு, கனடாவில் 2018ஆம் ஆண்டில் மிக அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் new generation of female voices என்ற விருது, ஜெஸ் மொஸ்கலுகே, கிரா இசபெல்லா, மடலின் மேர்லோ ஆகிய மூன்று பாடகிகளுக்கு கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.