கனடா செய்திகள்
ரஷ்யாவில் பாரிய இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
09/11/2018ரஷ்யாவில் பாரிய இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன. சுமார் 3 இலட்சம் சீனா, மங்கோலியா மற்றும் ரஷ்ய இராணுவ வீரர்களின் பங்கேற்புடன் பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு வாரம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள பயிற்சியில் 36 ஆயிரம் இராணுவ வாகனங்கள், ஆயிரம் விமானங்கள் மற்றும் 80 போர்க்கப்பல்களும் பங்கேற்கின்றன. இந்நிலையில் குறித்த போர்ப்பயிற்சி நடவடிக்கைகள் சர்வதேச நாடுகளின் மத்தியில் பதற்றத்தை உருவாக்குமென கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பயிற்சிக்கு நேட்டோ அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.