கனடா செய்திகள்
ரயில் நிலையத்தில் மயக்கமடைந்த நிலையில் இருந்த பெண்ணிற்கு நடந்த கொடுமை
09/13/2018ரொறொன்ரோ-பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர் ஒருவரின் பாதுகாப்பு கமரா படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர். இம்மாத ஆரம்பத்தில் கென்னடி நிலையத்தில் மயக்கமடைந்த நிலையில் இருந்த பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
40-வயதுடைய பெண் ஒருவர் செப்டம்பர் மாதம் 1ந்திகதி மாலை 5.30-மணியளவில் சுரங்க பாதை ரயில் நிலையத்திற்கு வெளியே தரையில் கிடந்ததாக பொலிசாரின் தகவல் பிரகாரம் தெரியவந்துள்ளது.
அவ்வழியால் மக்கள் நடந்து சென்று கொண்டிருக்கையில் மனிதன் ஒருவன் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இவர்களில் ஒருவர் சம்பவத்தை நிறுத்துமாறு குறிப்பிட்ட மனிதனை நோக்கி கத்தியுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்- 60-வயதுடைய வெள்ளை மனிதன் பெரிய உருவம் கிட்டத்தட்ட 6.2 உயரம் வெள்ளை கட்டையான தலைமுடி கொண்ட தோற்றமுடைய- அவ்விடத்தை விட்டு சென்று விட்டான்.
புலன் விசாரனையாளர்களின் கூற்று பிரகாரம் இம்மனிதன் கடைசியாக காணப்பட்ட போது கறுப்பு நிற காற்சட்டைக்குள் விடப்பட்ட கறுப்பு நிற ரிசேர்ட், பிறவுன் நிற லெதர் பட்டி, கறுப்பு சப்பாத்து மற்றும் fedora-பாணி பழுப்பு-மற்றும்-வெள்ளை தொப்பி அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நபரை அடையாளம் காணும் பொருட்டு கண்காணிப்பு கமரா படங்கள் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் எவராவது பொலிசாருடன் 416-808-7474 அல்லது 416-222-TIPS(8477)இலக்கத்தில் அனாமதேயமாக கிரைம் ஸ்ரொபசுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.