கனடா செய்திகள்
நிலவில் கால் பதிக்கும் ரகசிய மனிதர்: ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு
09/15/2018அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது இன்னும் 3 மாதத்தில் நிலவிற்கு மனிதர் ஒருவரை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
நிலவிற்கு மனிதனை மீண்டும் அனுப்புவதில் அமெரிக்காவின் நாசா தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகின்றது.
இதற்கு போட்டியாக அமெரிக்காவின் .ப்ளூ ஆர்ஜின், ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட மற்ற சில, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில், இதன் முதற்கட்டமாக அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் என்னும் நிறுவனமனது இன்னும் 3 மாதத்தில் நிலவிற்கு மனிதன் ஒருவரை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இதற்காக, அந்நிறுவனமானது உலகின் மிகப் பெரிய ராக்கெட்டான பல்கான் ஹெவி என்னும் ராக்கெட்டினை தயார்படுத்து வருகின்றது.
இருப்பினும், நிலவிற்கு அனுப்பப்படும் அந்த நபர் யார் என்ற தகவலை இன்னும் ஸ்பேஸ்எக்ஸ் வெளியிடவில்லை.