New year offer 2017

கனடா செய்திகள்

பயணிகளுடன் காணாமல் போன விமானம்

09/16/2018

எட்மன்டனில் இருந்து பிரிட்டிஷ் கொலம்பியா, சில்லிவாக் நோக்கி புறப்பட்ட விமானம் வெள்ளிக்கிழமை பிற்பகல் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானப்படை குழுவினர் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு இருக்கைகள் கொண்ட விமானத்தில் இருவர் இருந்ததாக பிரிட்டிஷ் கொலம்பியா, விக்டோரியா கூட்டு மீட்பு ஒருங்கிணைவு மையம் உறுதிப் படுத்தியுள்ளது.

எத்தகைய தனியார் விமானம் அல்லது எந்த நிறுவனம் அல்லது தனியாரிற்கு சொந்தமான விமானம் என்பதா சம்பந்தப்பட்ட தகவல்கள் தெரியவரவில்லை.

சில்லிவாக் மற்றும் வேல் மவுன்ட், பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு இடையில் நெடுஞ்சாலை 5ல் நீண்ட பாதை 600-கிலோமீற்றரில் அணியினர் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.