New year offer 2017

கனடா செய்திகள்

ஒன்ராறியோவின் உள்ஊர் அரசாங்கங்களை இலக்கு வைத்து சைபர் எச்சரிக்கை பொலிசார் எச்சரிக்கை

09/16/2018

ன்ராறியோ பொலிஸ் மாநகர சபைகளை எச்சரிக்கின்றனர். உள்ஊர் அரசாங்கங்களை இலக்கு வைத்து வெடித்துள்ள இந்த சைபர் தாக்குதல்கள்-கணனி கள்வர்கள் அமைப்புக்களின் அணுகல் பரிமாற்றம் செய்வதற்கு பெருந்தொகை பணத்தை கேட்டுள்ளனர்.

கப்பத்தொகையை மாகாண பொலிசார் தெரியப் படுத்தவில்லை. ஆனால் அண்மை மாதங்களில் வர்த்தகங்கள் மற்றும் மாநகர அதிகாரிகள் பலவற்றை தாக்கியுள்ளனரென கூறியுள்ளனர்.

சமீபத்திய சம்பவம்-ரவுன் நிர்வாகிகள் அவர்களது மாநகர சபை அமைப்புக்கள் பல பூட்டப்பட்டுள்ளமை மற்றும் தகவல் தரவுகளை மீண்டும் பெற அறிவக்கப்படாத தொகை பணத்தை கேட்டுள்ளதையும் மிட்லன்ட் ஒன்ராறியோவில் கண்பிடித்தனர்.

மிட்லன்ட் நகரம் அண்மையில் இது போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள காப்புறுதி ஒன்றை வாங்கியுள்ளதென மிட்லன்ட் மேயர் கோட் மக்கெய் கூறினார். வாசாகா பீச் ஒன்ராறியோவில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இது போன்ற தாக்குதல் நடந்ததை தொடர்ந்து இந்த செயற்பாடு இடம் பெற்றுள்ளது.

கப்பம் செலுத்துவது குற்றத்தை ஊக்குவிப்பது போன்றது என ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரிவித்தனர்.