New year offer 2017

கனடா செய்திகள்

கனேடிய பிரபல புவியியல் ஜாம்பவான் காலமானார்

09/17/2018

கனடாவைச் சேர்ந்த பிரபல எண்ணெய் நிறுவனரும், புவியியலாளருமான க்ளே ரிடில் என்பவர் தனது 81ஆவது வயதில் காலமானார்!

கனடாவில் 1974ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Paramount Resources நிறுவனத்தின் உரிமையாளராக விளங்கிய க்ளே ரிடில்,Calgary Flames என்ற ஹொக்கி விளையாட்டு நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார்.

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, தன்னுடைய உடல் நிலை மோதமடைந்ததையடுத்து தனது தலைமை பதவியை மகள் ஜிம் ரிடிலிடம் ஒப்படைத்துள்ளார்.

இதையடுத்து,அவருடைய மகள் சுசன் றிடில் றேராஸ்ஸீம் தந்தையைப் போல் எண்ணெய் வர்த்தகத்தில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்தார்.

அவர் தன்னுடைய சொந்த உழைப்பில் Perpetual Energy என்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய உடல் நிலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த க்ளே ரிடில், தனது 81ஆவது வயதில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சொத்துக் கணக்கெடுப்பின்படி 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்தைக் கொண்டிருந்த க்ளே ரிடில், 2018ஆம் ஆண்டு 1.1 பில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்று தனி வருமானத்தில் வீழ்ச்சியை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.