கனடா செய்திகள்
அமெரிக்க கடற்கரையில் கொடூரமான சுறாவிற்கு இறையான வாலிபர்
09/17/2018அமெரிக்க கடற்கரையில் கொடூரமான சுறா ஒன்று தாக்கியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,,!
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம், நியூகோம்ப் ஹாலோ கடற்கரையில் நேற்று முன்தினம் 26 வயது வாலிபர் ஒருவரை கொடூரமான சுறா தாக்கியுள்ளது.
சுறா தாக்குதலின் போது பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை வெளியே இழுத்து முதலுதவி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வெல்ஃப்ளீட் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்துக்கு நியூகோம்ப் ஹாலோ கடற்கரையில் நீச்சல் வீரர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
1936ஆம் ஆண்டுக்கு பிறகு சுறா தாக்கி ஒருவர் உயிரிழந்தது இதுவே முதன்முறையாகும். இருப்பினும்,முன்னதாக கடந்த ஆகஸ்டு மாதம் 61 வயதான நரம்பியல் மருத்துவ நிபுணர் வில்லியம் லிட்டன் சுறா தாக்குதலுக்கு ஆளானார்.
கால்களில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.