New year offer 2017

கனடா செய்திகள்

சீனாவை புரட்டி போட்ட மாங்கட் சூறாவளி 25 லட்சம் பேர் இடப்பெயர்வு 400 விமானங்கள் ரத்து

09/17/2018

பிலிப்பைன்சை தொடர்ந்து சீனாவையும் மாங்கட் சூறாவளி தாக்கியுள்ளது. இதன் புயல் காரணமாக 25 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர்...

பிலிப்பைன்சை தாக்கிய மங்குத் புயல், நேற்று சீனாவையும் தாக்கியது. பிலிப்பைன்சின் பல பகுதிகளை நேற்று முன்தினம் தாக்கிய ‘மங்குத்’ புயலில் சிக்கி 49 பேர் உயிரிழந்தனர்.

இந்த புயலால் ஏற்பட்ட கனமழை, நிலச்சரிவுகள் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் சேதமடைந்து உள்ளன. பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. ஏராளமானோர் காணவில்லை. 87 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது இந்த புயலானது பிலிப்பைன்சில் இருந்து நகர்ந்து, ஹாங்காக்கையும் தெற்கு சீனாவையும் நேற்று தாக்கியுள்ளது. அப்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.

மங்குட் புயல் தாக்கத்தின் அச்சம் காரணமாக பாதுகாப்பு கருதி அங்கு வசித்த 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

மேலும், 48,000 மீன்பிடிப் படகுககள் கடலுக்குள் இருந்து மாகாணத்தின் துறைமுகத்துக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதையடுத்து, 2 விமான நிலையங்களில் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 632 சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது.