New year offer 2017

கனடா செய்திகள்

ரொறொன்ரோவின் பரபரப்பான நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மரண வீழச்சி

09/19/2018

நெடுஞ்சாலை 401ன் உயர்ந்த பகுதியில் இருந்து மனிதன் ஒருவர் விழுந்த மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான புலன் விசாரனைகளை மாகாணத்தின் விசேட புலன்விசாரனை பிரிவு நடாத்துகின்றது.

செவ்வாய்கிழமை அதிகாலை 2மணியளவில் நெடுஞ்சாலை 401ன் கிழக்கு கலெக்டர் பாதைகளில் மனிதன் ஒருவர் நடந்து சென்று கொண்டிருப்பதாக விசேட விசாரனை பிரிவினருக்கு-ளுஐரு- பல 911 அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன. அவெனியு வீதி மற்றும் யங் வீதிக்கிடையில் சம்பவம் நடந்துள்ளது.

ஒன்ராறியோ மாகாண பொலிஸ் அதிகாரி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும்; தொடர்ந்து குறிப்பிட்ட மனிதன் வடக்கு நோக்கிய நான்கு போக்கு வரத்து பாதைகள் ஊடாக ஓடியதாகவும் ளுஐருவினரின் கருத்து பிரகாரம் தெரியவந்துள்ளது.

பின்னர் மனிதன் பாலத்திலிருந்து கீழே டொன் வலி குழிப்பந்தாட்ட மைதானத்தின் தரையில் விழுந்துள்ளார்.

401 கடுகதி பாதை மற்றும் கலெக்டர் பாதைகளின் திறந்த பிரிப்பின் ஊடாக விழுந்ததாக கூறப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைக்கு கீழே கிடந்து கண்டு பிடிக்கப்பட்டார்.

சிறிது நேரத்தின் பின்னர் அவ்விடத்திலேயே இறந்து விட்டார்.

கிட்டத்தட்ட 30மீற்றர்கள் உயர பாலத்தின் தளத்திலிருந்து விழுந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விழுந்தவர் குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.