கனடா செய்திகள்
கனடாவில் 19 வயது வாலிபர் சுட்டுக்கொலை: பொலிசார் விசாரணை
09/20/2018கனடாவின் Scarborough-ல் நடந்த துப்பாக்கி சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கனடாவின் பிரிம்லி வீதி மற்றும் ஷெப்பேர்ட் அவென்யூ பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சரியாக 10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
சம்பவத்தன்று Sheppard Avenue பகுதியின் ஒரு கட்டிடத்தின் பின்புறத்தில், துப்பாக்கியால் சுடப் பட்ட நிலையில் 19- வயது நிறைந்த வாலிபர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிசாரின் விசாரணையில், ரொறன்ரோவை சேர்ந்த ஆண்டர்சன்(வயது 20) என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரொறன்ரோ பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து விவரம் அறிந்தவர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.