New year offer 2017

கனடா செய்திகள்

ரொறொன்ரோ மிருக காட்சி சாலையில் அறிமுகமாகும் அருகிவரும் குள்ளமான நீர்யானை குட்டி

09/20/2018

புதன்கிழமை ரொறொன்ரோ மிருககாட்சிசாலை மிக அரிதான மற்றும் அருகி வரும் இனமான குள்ளமான பேபி நீர்யானை ஒன்றை அறிமுகம் செய்து வைக்கின்றது.

கடந்த மாதம் இந்த குட்டி பிறந்துள்ளது.

12-வயதுடைய கின்டியா என்ற பெண் நீர்யானை ஆகஸ்ட 10ல் பெண் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.

இந்த இனம் மிக அரிதான ஒன்றாகும். மேற்கு ஆபிரிக்க காடுகளில்-பெரும்பாலும் லைபீரியாவில்-கிட்டத்தட்ட 2,000 முதல் 3,000-வரையிலுமானவைகளே உள்ளன.

சியாரா லியோன், கினியா மற்றும் ஐவொரி கோஸ்ட் பகுதிகளில் குறைவான எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

2016ல் பிரான்ஸ் மிருக காட்சிசாலையில் இருந்து உலகளாவிய இனப்பெருக்க திட்டத்தின் ஒரு பகுதியாக ரொறொன்ரோ மிருக காட்சிசாலையை வந்தடைந்தது.

ரொறொன்ரோ மிருக காட்சி சாலையின் வரலாற்றில் ஏழாவது பிறப்பும் எஞ்சியிருக்கும் முதலாவது குட்டியும் இதுவாகும்.

செப்ரம்பர் 20லிருந்து தினமும் காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 3மணிவரை கண்காட்சியில் இருக்கும்.