New year offer 2017

கனடா செய்திகள்

வியட்நாம் அதிபர் டிரான் டாய் உடல் நலக்குறைவால் காலமானார்

09/21/2018

வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல் நலக் குறைவால் தனது 61. வயதில் காலமானார்

வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் கடந்தவாரம் தீவிர உடல்நலக்குறைபாடு காரணமாக சர்வதேச ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர்க்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் வியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் மரணமடைந்ததாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டப்படிப்பில் பி.எச்.டி பட்டம் பெற்ற ட்ரான் டாய் குவாங் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் வியட்நாமின் அதிபராக பதவிவகித்து வந்தார்.

இவர் கடந்த 2006 முதல் 2011 வரை மக்கள் பாதுகாப்புத்துறையின் துணை மந்திரியாகவும், பின்னர் 2011 முதல் 2016 வரை அதே துறையில் மந்திரியாகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, ட்ரானின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.