New year offer 2017

கனடா செய்திகள்

சீனா ராணுவத்தின் மீது அமெரிக்கா சில தடை விதிப்பு

09/21/2018

ரஷ்யாவிடம் ராணுவ பொருட்கள் வாங்கிய சீனா மீது, அமெரிக்கா சில ராணுவ தடை விதித்துள்ளது.

அமெரிக்கா முன்னதாக, யுக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கை மற்றும் அமெரிக்க அரசியலில் அதன் தலையீடு இருந்ததாக கூறப்படுவது குறித்தும் சில தடைகள் விதித்திருந்தது.

இதை தொடர்ந்து, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் மீது அமெரிக்கா தடை விதிப்பு தொடர்ந்து வருகின்றது.

இதையடுத்து , சமீபத்தில் ரஷ்யாவிடம், சீனா ராணுவ ஜெட் விமானம் மற்றும் ஏவுகணைகளான வாங்கியுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவிடம் 10 ரஷ்ய சுகோய் Su-35 வகை போர் விமானங்களையும், S-400 வகை ஏவுகணைகளையும் வாங்கிய சீன ராணுவம் மீது அமெரிக்கா சில தடைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், இது போன்ற நடவடிக்கைகளை மற்ற நாடுகள் மீது எடுப்பது குறித்து அமெரிக்கா பரிசீலினை மேற்கொள்ளும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாஸ்கோவில் அரசியல்வாதி ஒருவர், அமெரிக்கா விதித்துள்ள தடையால் தங்களின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் விற்பனையில் எந்த பாதிப்பும் இருக்காது என்றார்.

மேலும் அவர், கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதியில் ஏறக்குறைய 70 சதவீதம் ஆசியா பங்கு வகிப்பதாகவும்.

இந்த ராணுவ சாதனத்தை வைத்திருப்பது சீனாவுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்'' என்றும் தெரிவித்துள்ளார்.