New year offer 2017

கனடா செய்திகள்

பயங்கரவாதி புர்கான் வானிக்கு தபால் தலை

09/21/2018

காஷ்மீரில் பாதுகாப்புபடையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்கான் வானியை தியாகியாக சித்திரித்து பாக்.கில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி புர்கான் வானி,22 பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சுட்டு்க்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை பாகிஸ்தான் கையில் எடுத்துக்கொண்டு இந்தியாவிற்கு எதிராக விஷமபிரசாரம் செய்தது.சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்கான் வானியை , காஷ்மீர் விடுதலைக்காக உயீர்நீத்த தியாகி என்றெல்லாம் பாராட்டியது பாக்.

இந்நிலையில் பாகிஸ்தான் தபால் தலை சேகரிப்பு ஆணையம். பயங்கரவாதி புர்கானியை தியாகத்தி்ன் சின்னம் என கவுரவித்தும் காஷ்மீர் தியாகிகள் தினம் என கொண்டாடியும் தபால் தலை வெளியிட்டுள்ளது.