New year offer 2017

கனடா செய்திகள்

400 கொடிய விலங்குகளுடன் வாழும் 67 வயது ஜாம்பவான்

09/22/2018

பிரான்சில் 67 வயது நிறைந்த முதியவர் ஒருவர் 400 கொடிய விலங்குகளுடன் வாழ்ந்து வருகிறார்.

பிலிப் கில்லட் என்ற பெயர் 67 வயது நிறைந்த முதியவரான இவர். பிரான்சில் அமைந்துள்ள லூரே என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.

இவர், தன்னுடைய சிறுவயது முதல் மிருகங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவராம்.

இதையடுத்து, இவர் தன்னுடைய வீட்டில் இரண்டு முதலைகள், ராட்சச ஆமை, நல்ல பாம்பு, பயங்கரமான விஷம் உடைய கட்டுவிரியன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட விலங்குகளை வைத்து வளர்த்து வருகிறார்.

இதன் மூலம், பிலிப் கில்லட் விலங்குகளின் காதலன் என்ற பெயரோடு அன்போடு அழைக்கப்படுகிறார்.

விலங்குகள் மீது , இவருக்கு இருந்த அன்பு எதிர்பார்ப்பு, நோக்கம் மற்றும் கொள்கை ஆகியயவற்றை பார்த்து பிரான்ஸ் அரசு, இவருக்கு விலங்குகளை வளர்க்க அனுமதி கொடுத்துள்ளது.

இதையடுத்து, பிலிப் கில்லட் விலங்குகளை அடிக்கடி வெளியூருக்கு அழைத்து சென்று மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை கழித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளார்.