கனடா செய்திகள்
வடக்கில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
09/22/2018வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சம்ரகமுவ, மேல் மாகாணங்களில் 75 மில்லி லீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதால் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.