கனடா செய்திகள்
அமெரிக்காவில் கொடூரம் குழந்தை வேண்டி கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த நபர்கள்
09/24/2018அமெரிக்காவில் வாழும் ஒரு தம்பதியினர் குழந்தை இல்லை என்பதற்காக கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட 22 வயது நிறைந்த சவன்னா என்ற இளம்பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இதையடுத்து,கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உறவினர்கள் சவன்னா காணாமல் போனதாக பொலிஸில் புகார் அளித்தனர்.
அவர்கள் அளித்துள்ள, புகாரில் அடிப்பதில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சவன்னாவின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும், குழந்தை இல்லாத தம்பத்தினர் குழந்தைக்கு ஆசைப்பட்டு கர்ப்பிணியாக இருந்த சவன்னாவின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்த தம்பதியினரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக, நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.