New year offer 2017

கனடா செய்திகள்

அமெரிக்காவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் சீசா வீடு காற்றில் பறக்கும் வினோதம்

09/25/2018

அமெரிக்காவில் காற்றில் அசைந்தாடும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள சீசா வீடானது பார்ப்பவர் கண்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே முதன்முறையாக கட்டப்பட்ட இந்த வீடானது காற்றின் வேகத்திற்கேற்ப அசைந்தாடும் தன்மை கொண்டவையாகும்.

இந்த வீட்டினை நியூயார்க் பகுதியை சேர்ந்த புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர் மற்றும் ஓவியரான அலெக்ஸ் மற்றும் வார்ட் ஷெல்லி ஆகியோர் இணைந்து சீசா போன்று வடிவமைத்துள்ளனர்.

14 அடி உயரத்தில் கட்டிடக்கலை நிபுணரின் கை வண்ணத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கண்ணாடி மாளிகையானது மின்சாரம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வீட்டை தவிர வேறு எந்த பொருளும் அசையா வண்ணம் வீட்டின் உட்புறத்தில் மேசை நாற்காலி போன்றவை நிரந்தரமாக பொறுத்தப்பட்டிருக்கிறது.