New year offer 2017

கனடா செய்திகள்

NAFTA-ஒப்பந்தத்தை கட்டமைக்க சாத்தியமுண்டு ஜஸ்டின் ட்ருதியே

09/26/2018

NAFTA-ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை புதுப்பிப்பதற்கான சாத்தியப்பாடு உண்டென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

NAFTA-ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவும் மெக்சிகோவும் ஏற்கனவே இருதரப்பு உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ள வருகிறது.

இந்நிலையில், வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தையை நிறைவு செய்வதற்கான, தொடர்ந்த கனடா உடன்படிக்கைக்கு அமெரிக்கா அச்சறுத்தலின் பேரில் பதில் அளித்து பேசிய ஜஸ்டின்

இதுபற்றி நியூயோர்க்கில் இடம்பெற்ற வெளிநாட்டு உறவுகள் ஆலோசனை சபையின் சந்திப்பொன்றில் எழுப்பப்பட்ட கேள்விவிக்கு பதிலளித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,,

அமெரிக்காவும், மெக்ஸிகோவும் சில உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அது அவர்களின் தீர்மானங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், கனடாவின் நலன்களில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். கனடாவிற்கு மட்டுமன்றி அமெரிக்காவிற்கும் நன்மையளிக்கும் வகையில் குறித்த ஒப்பந்தம் அமையவேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு இடையிலான வர்த்தக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான சிறந்த வழியாக இந்த ஒப்பந்தம் அமையும். அத்துடன், அமெரிக்காவின் கேள்விக்கு அமைய கனடாவின் பாதுகாக்கப்பட்ட பால் சந்தையை அதிகளவில் அணுகுவதற்கும், வணிகப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கும் இந்த ஒப்பந்தம் வழிசமைக்குமென கனேடிய அதிகாரிகள் நம்புகின்றனர்.

இதேவேளை, இந்த ஒப்பந்தம் சாத்தியமானதாக இருக்கவேண்டுமென்றால், வாகன இறக்குமதி மீதான தீர்வை வரி சீர்திருத்தங்கள் தொடர்பிலான அமெரிக்காவின் அச்சுறுத்தலை மீளப்பெற வேண்டுமென்றும் கனேடிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

.