New year offer 2017

கனடா செய்திகள்

இளைஞர்களின் வேலையின்மை விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் மேயர் ஜோன் ரோறி

09/26/2018

மீண்டும் மேயர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டால், அதிகமான இளைஞர்களின் வேலையின்மை விகிதத்தை குறைப்பதற்காக வேலைதிட்டத்தை முன்னெடுப்பதாக ரொறொன்ரோவின் மேயர் ஜோன் ரோறி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டம் காரணமாக எண்ணற்ற அளவில் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் அவர் கூறினார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி ரொறொன்ரோவின் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதற்காக நேரடி பிரசார நடவடிக்கையில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் இன்று இளைஞர் தலைவர்களுடனான ஒரு சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “குறிப்பாக 2009 இல் நிறுவப்பட்ட இந்த வேலைத்திட்டம் தொழில்துறையிலுள்ள பயிற்சி பெற்ற மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது.

ஒரு வேலை கிடைக்குமா அல்லது பணிக்கு ஒரு பாதையை கூட காணமுடியாத அளவிற்கு இன்று பல இளைஞர்கள் உள்ளனர் இன்று ஆதரவு பற்றி கொஞ்சம் பேசுகிறோம், இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் சில திட்டங்களை சரியான பாதையில் போய்ச் சேர்ப்பதற்கும், ஒரு பெரிய வேலை திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்” என்று டோரி கூறினார்.