New year offer 2017

கனடா செய்திகள்

உலகிலேயே சக்திவாய்ந்த மில்லிரோபோ சாதனை படைத்த விஞ்ஞானிகள்

09/27/2018

உலகிலேயே சக்திவாய்ந்த மில்லிரோபோவை உருவாக்கி ஹாங்காங் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

ஒரு மில்லிமீட்டர் நீலமே கொண்ட இந்த ரோபோ மில்லிரோபோ என்று பெயரிடப்பட்டுள்ளது. கம்பளிப்பூச்சி போன்று ஊர்ந்து செல்லும் அளவுக்கு அதிக கால்களை கொண்டு இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது

புழுபோன்ற அமைப்புடன் செய்யப்பட்டுள்ள இந்த ரோபோவினை மனித உடலுக்குள் செலுத்தப்பட்டு ஆராய்ச்சி செய்யவும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ரோபோவினை வடிவமைப்பதற்காக 100க்கும் மேற்பட்ட விலங்குகளை ஆய்வு செய்ததாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகுகின்றனர்.

ரிமோட் கண்ட்ரோல் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த மில்லிரோபோவானது, அதிக அழுத்தத்தை தங்குவதால் உலகில் சக்திவாய்ந்த ரோபோ என்ற சாதனையும் படைத்துள்ளது.

இதன் மூலம்,மனிதரின் மேல் சிறிய பேருந்தை ஏற்றி நிற்கச்செய்யும் அளவுக்கு இதன் அழுத்தம் தாக்குப்பிடிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.