New year offer 2017

கனடா செய்திகள்

மெக்ஸிகோ ராணுவத்தின் கட்டுப்பாட்டில் பொலிஸ் தலைமையகம்

09/27/2018

மெக்ஸிகோ கரையோர நகரமான அகபுல்கோவின் பொலிஸ் தலைமையகத்தை, அந்நாட்டு ராணுவம் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.

மெக்சிகோ கடற்கரை நகரமான அகபுல்கோ (Acapulco ) வில் பொலிஸ் தலைமையகம் ஒன்று அமைத்துள்ளது.

சம்பவத்தன்று, பொலிஸ் தலைமையகம் சென்ற அந்நாட்டு கடற்படை ராணுவம், பொலிஸாரிடமிருந்த தளவாடங்கள், குண்டு துளைக்காத ஆடைகள் ஆகியவற்றை கைப்பற்றியதுடன் சுமார் 700 பொலிஸ் அதிகாரிகளை நிராயுதபாணியாக்கியுள்ளது.

இது குறித்த விசாரணையில், மெக்ஸிகோவில் காவல்துறையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து, அந்நாட்டு ராணுவம் காவல்துறையை கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான சந்தேகம் எழுந்ததை அடுத்து நேற்று (புதன்கிழமை) இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணைகள் நிறைவடையும்வரை அந்த நகர் ராணுவத்தினரின் கண்காணிப்பிலேயே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்திய பொலிஸ் மற்றும் இராணுவம் தற்பொழுது அந்த நகரின் அனைத்து இடங்களையும் தீவிர தேடுதல்களுக்கு உட்படுத்தியுள்ளது.