New year offer 2017

கனடா செய்திகள்

ஜனாதிபதி ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்ட முக்கியஸ்தருக்கு புதிய சிக்கல்

09/29/2018

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக, ஜனாதிபதி ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கவனாவுக்கு எதிரான பாலியல் புகார் விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியினர் அரசியல் நாடகமாடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பிரெட் கவனாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதன் மூலம் குடியரசுக் கட்சியினர் நீண்ட காலம் நீதித்துறையில் செல்வாக்கு செலுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கவனா மீது கிறிஸ்டீன் பிளெஸ்ஸி போர்ட்என்ற பெண் பாலியல் புகார் வழங்கியிருந்தார். அதில் கடந்த 1980 ஆம் ஆண்டு கவனா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.

இதையடுத்து இருவரும் கடந்த வியாழக்கிழமை செனட் குழு முன் விசாரணைக்கு ஆஜராகினர். இந்த விசாரணையின் போது அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்தாலும் ஜனநாயகக் கட்சியினர் அவருக்கு ஆதரவாக இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.