New year offer 2017

கனடா செய்திகள்

அல்பேர்ட்டா சஸ்கற்சுவான் மனிரோபா அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுகின்றது.

09/30/2018

எட்மன்டன்--சதுப்பு நிலங்கள் பூராகவும் குறைந்த பட்ச அடிப்படை சம்பளம் உயர்ந்து வருகின்றது. அல்பேர்ட்டா சஸ்கற்சுவான் மற்றும் மனிரோபா ஆகிய இடங்களிலும் திங்கள்கிழமை நடை முறைக்கு வருகின்றது.

அல்பேர்ட்டா மணித்தியால அடிப்படை ஊதியத்தை டொலர்கள் 13.60லிருந்து டொலர்கள் 15ஆக உயர்த்துகின்றது. நாட்டின் அதி உயர் அடிப்படை சம்பளம் இதுவாகும்.

மனிரோபாவில் குறைந்த பட்ச மணித்தியால ஊதியம் 20 சதங்களால் அதிகரித்து டொலர்கள் 11.10லிருந்து 11.35ஆக உயர்கின்றது.

சஸ்கற்சுவானின் குறைந்த ஊழியம் பெறுபவர்கள் மிக குறைந்த அதிகரிப்பை பெறுகின்றனர். 10சதங்கள் அதிகரித்து மணித்;தியாலம் ஒன்றிற்கு 10.96டொலர்களிலிருந்து டொலர்கள் 11.6ஆக அதிகரிப்பை பெறுவர்.

அல்பேர்ட்டா என்டிபி அரசாங்கம் 2015ல் தெரிவு செய்யபட்டதிலிருந்து வருடந்தோறும் குறைந்த பட்ச ஊதியத்தை அதிகரித்துள்ளது.

மனிரோபாவும் சஸ்கற்சுவானும் அவர்களது பணவீக்க விகிதத்தை அடிப்படையாக கொண்டு குறைந்த பட்ச ஊதியத்தை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன.