New year offer 2017

கனடா செய்திகள்

செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த உலகில் முதல் சிங்க குட்டிகள்

10/01/2018

தென் ஆப்பிரிக்காவில், விஞ்ஞானிகள் முயற்சியால் பெண் சிங்கம் ஒன்று செயற்கை கருத்தரிப்பின் மூலம் 2 சிங்க குட்டிகளை ஈன்றுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் பிரிடோரியாவில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆண் சிங்கத்தின் விந்தணுவை (உயிரணு) சேகரித்தனர்.

அதை தகுதி வாய்ந்த பெண் சிங்கத்தின் கருமுட்டையுடன் இணைத்து சமீபத்தில் செயற்கை கருத்தரிப்பு செய்தனர். பின்னர் அதை பெண் சிங்கத்தின் கர்ப்பபைக்குள் வைத்தனர்.

இதையடுத்து, அந்த சிங்க குட்டி ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு சிங்க குட்டிகளை ஈன்றது. எனவே, இவை முதன் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த சிங்க குட்டிகள் என்ற பெருமையை பெற்றுள்ளன.

இதையடுத்து, அந்த இரண்டு சிங்க குட்டிகளும் வன விலங்கு சரணாலயத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.