New year offer 2017

கனடா செய்திகள்

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு

10/01/2018

மருத்துவத்துக்கான நோபல் பரிசு புற்றுநோய் மருந்து கண்டுபிடிப்புக்கு ஜேம்ஸ் பி.அலிசன் மற்றும் தசுக்கு ஹன்ஜோ பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.

உலக அளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசாக நோபல் பரிசு இருந்துவருகிறது. இந்த பரிசானது ஒவ்வொரு வருடமும் இலக்கியம், கலை, அறிவியல், இயற்பியல்,வேதியியல், என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டின் மருத்துவம் (அ) உடலியல் பிரிவிற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜேம்ஸ் பி. அல்லிசன் மற்றும் தஸ்கு ஹூன்ஜு இந்த விருதினை பகிர்ந்துக்கொண்டனர்.

1948-ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பிறந்த ஜேம்ஸ் பி. அல்லிசன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்

1942-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் கியோட்டோ பகுதியில் பிறந்த தஸ்கு ஹூன்ஜு ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

இவர்கள் இவருமே, தற்போது பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.