New year offer 2017

கனடா செய்திகள்

இந்தோனேசிய இயற்கை பேரிடர் பலி எண்ணிக்கை 1000 யை தாண்டியது

10/01/2018

இந்தோனேசியாவில் பாரிய பூகம்பம் மற்றும் சுனாமியால் தாக்கப்பட்டு சுலாவெசி மாகாணத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டி விட்டது.

இந்தோனேசியாவில், கடந்த 27-ந்தேதி 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

அதை தொடர்ந்து, 350,000 அதிகமான மக்கள் வசித்த பலு என்ற கடற்கரை நகரத்தை 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது.

அப்போது அந்த நகரத்தில் கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் இந்த சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சுனாமி தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 832 என இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது.

ஆனால், தொடர்ந்து பிணங்கள் மீட்கப்பட்டு வருவதால் சுலாவெசி மாகாணத்தில் மட்டும் சாவு எண்ணிக்கை 1000-ஐ தாண்டி விட்டது.

இன்னும் நிலநடுக்கம் தாக்கிய சில பகுதிகளிலும் மீட்பு பணி நடைபெற வேண்டியுள்ளது. இங்கு 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என துணை அதிபர் ஜுசுப் கல்லா கருத்து தெரிவித்தார்.

இதேவேளை பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றொரு நகரான டொன்கலாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகததை மீட்பு பணியாளர்கள்; சுட்டிக்காட்டியுள்ளனர்

இதற்கிடையே பேரிடர் மீட்பு பணிக்கு ரூ.275 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நிதி மந்திரி ஸ்ரீமுல்யான் இந்திராவதி கருத்து தெரிவித்தார்.