New year offer 2017

கனடா செய்திகள்

அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு இடையில் புதிய USMCA ஒப்பந்தம்

10/01/2018

NAFTA- வை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட புதிய ஒப்பந்தமொன்றை அமெரிக்காவும் கனடாவும் எட்டியுள்ளன.

அமெரிக்காவும் மெக்சிகோவும் ஏற்கனவே இருதரப்பு உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ள வருகிறது.

இந்நிலையில், NAFTA- எனப்படும் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விட மேம்படுத்தப்பட்ட புதிய ஒப்பந்தமொன்றை அமெரிக்காவும் கனடாவும் எட்டியுள்ளன

அந்த ஒப்பந்தத்திற்கு ஐக்கிய அமெரிக்க – மெக்சிக்கோ – கனடா ஒப்பந்தம் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ரொபர்ட் லைட்ஸெர் மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலான்ட் ஆகியோர் கூறும்போது,

இந்த புதிய உடன்பாட்டின் அடிப்படையில் கனடாவின் பால்பொருள் சந்தையில் அமெரிக்காவின் செல்வாக்கை அதிகரிக்க முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் படி, அமெரிக்க பாலுற்பத்தியாளர்களில் 3.5 வீதமானோர் கனடாவின் பால்சந்தையை அணுகலாம்.

அதோடு,கனடாவின் வாகன ஏற்றுமதியில் அமெரிக்காவின் நியாயமான வரிவிதிப்பிற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இப்புதிய ஒப்பந்தமானது, நடுத்தர வருமானம் பெறுவோரின் வருமானத்தை அதிகரிப்பதோடு, புதிய தொழில்வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என்றனர்.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பான இறுதிக்கட்ட தீர்மானத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று காலக்கெடு விதித்திருந்தார். அதன் பிரகாரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், இறுதித் தருவாயில் இந்த ஒப்பந்தம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.